இந்தியாவிற்கு எதிரான T20 உலக கோப்பை போட்டியில் இருந்து பிரபல விளையாட்டு வீரர் திடீர் விலகல்!
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் கனஜோராக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த போட்டிகள் நிறைவடைந்தது. இதில் நடந்த இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை போட்டிகளை நடத்தியுள்ளன. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவும் உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி நேற்று ஜெய்ப்பூர் வருகை தந்தது. மேலும் உலக கோப்பை தொடரில் ஏற்கனவே பயோ பபுள் வளையத்தில் வீரர்கள் இருந்ததன் காரணமாக அவர்கள் தனி விமானம் மூலம் ஜெய்ப்பூருக்கு வந்து இறங்கினர்.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் தகுதி சுற்றுடன் வெளியேறியது இந்திய அணி. உலக கோப்பையில் 2-வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுள்ளார். அவர் பொறுப்பேற்ற பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான T20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் அதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளார். கான்பூரில் இந்த மாதம் 25 ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்காக தயாராவதற்காக இதில் இருந்து விலகுவதாகவும், இந்தியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகுவதாகவும், கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளை தொடங்கும் டி20 தொடரின் தொடக்கத்தில் கேப்டனாக டிம் சவுதி பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து சார்பில் டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாக்கி பெர்குசன், மார்ட்டின் குப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட் (கீ); இஷ் சோதி, டிம் சவுதி (கே) இவர்கள் எல்லாம் விளையாடுவார்கள் என சொல்லப்பட்டு உள்ளது.