Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இந்திய வீரர் யார்! அந்த சாதனையின் நாயகன்?

தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஐபிஎல் தொடரில் எப்படியும் கோப்பையை கைப்பற்றும் என நினைத்திருந்த சென்னை அணி தொடர்ந்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியது.

இந்த நிலையில், பெங்களூரு அணியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது இதன் காரணமாக, ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்காளானார்கள்.

எப்போதுமே சென்னை அணிக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது மிகையாகாது.இந்த நிலையில், இந்த ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இதற்கு நடுவில் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், உள்ளிட்ட அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. ஹெட்மயர் 50 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார் அணியின் சார்பாக ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் காரணமாக, அந்த அணி தோல்வியை சந்தித்தது கடைசி சமயத்தில் களத்தில் போராடி வந்த மார்கஸ் 4 சிக்சர் 2 பவுண்டரி உட்பட 38 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமலிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணியின் சார்பாக சாகல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இந்த பட்டியலில் 173 விக்கெட்டுகளை கைப்பற்றி பிராவோ முதலிடத்திலும், இலங்கை அணியை சார்ந்த மலிங்கா 170 விக்கெட்டுகளை கைப்பற்றி 2வது இடத்திலும், 166 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவைச் சேர்ந்த அமித் மிஸ்ரா 3வது இடத்திலும், அதேபோல 157 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியாவை சார்ந்த பியூஸ் சாவ்லா 4வது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.

அதேபோல இந்தியாவைச் சார்ந்த ஹர்பஜன்சிங் 150 விக்கெட்டுகளை கைப்பற்றி 5வது இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version