Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய அணியின் முக்கிய வீரர்!

3 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறது இதனடிப்படையில் இந்தியா, இலங்கை, அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சவாலான அணிதான் என்றாலும் கூட அதனை இந்திய அணியால் மிகவும் எளிதாக வெற்றி பெற முடியும் என இந்திய அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

ஏனென்றால் இந்திய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கும் சரி பவுலிங்கும் சரி உறுதியாக இருப்பதால் அணி நிர்வாகம் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சாஹல் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன் காரணமாக இந்தியாவிற்காக சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவர் 67 விக்கெட் எடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக ஜஸ்பிரித் பும்ரா 66 விக்கெட் எடுத்து இவருக்கு அடுத்த இடத்திலிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version