தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
193
Chance of moderate rain in Tamil Nadu!! Meteorological Department Announcement!!

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் மழை பெய்வது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது, மேற்கு திசையில் காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுகிறது.

இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனையடுத்து நாளை முதல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களில் உள்ள ஒரு சில இடங்களில் லேசானது முதல மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு வானம் மூடியபடி காட்சி அளிக்கும். மேலும், நகரின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 35-36  டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28  டிகிரி செல்சியசும் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடல் மற்றும் அதனோடு ஒட்டி உள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூராவளிக்காற்றானது மணிக்கு 45-55 கிலோ மீட்டரிலும்,

மேலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் என்ற வேகத்திலும் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.