தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழையால் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்வது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாற இருக்கிறது.
எனவே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாநிலங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மலைப்பகுதிகளிலும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப் பெய்யக்கூடும்.
மேலும், வருகிற ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலங்களில் நகரின் ஓரி சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
டெல்லி மற்றும் இமாசலப் பிரதேச பகுதிகளில் கனமழையால் வீடுகள் சாலைகள் என அனைத்தும் பெருமளவில் சேதமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.