சந்திரயான் 3 விண்கலம் வெற்றி.. 1008 விளக்கு மூலம் இஸ்ரோ லோகோ செய்த கோவில் நிர்வாகம் !!
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் எல்லை கருப்பன் கோவிலில் தேன்கூடு அமைப்பினரும் கோவில் நிர்வாகத்தினரும் சேர்ந்து 1008 விளக்குகள் மூலமாக இஸ்ரோ லோகோ செய்திருந்தனர்.
கோவை மோட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பௌர்ணமி நாளையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்பொழுது சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டதற்கு இஸ்ரோவிற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் அங்கு பணிபுரிந்த பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக 108 மீட்டர் நீளம் கொண்ட தேசியக் கொடியும், பல வண்ணங்கள் நிறைந்த கோலமும் இடப்பட்டு அதில் 1008 மண் விளக்குகள் விளக்குகள் வைத்து தீபமும் ஏற்றப்பட்டது.
இதில் இஸ்ரோவின் லோகோ, தேன் கூடு அமைப்பின் லோகோ, நிலவின் உருவப்படம் ஆகியவை வரையப்பட்டு அதில் 1008 மண் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதில் 108 ஆன்மீக பெரியவர்கள் கலந்து கொண்டனர். 108 தூய்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இந்த சிறப்பு பூஜையில் கோவை, சென்னை, திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்னிபாளையம் கருப்பராயன் கோவில் நிர்வாகத்தினரும் தேன்கூடு அமைப்பினரும் செய்திருந்தனர்.