Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Change of direction of traffic on major roads!! Important notice issued by the police!!

Change of direction of traffic on major roads!! Important notice issued by the police!!

முக்கிய சாலைகளில் போக்குவரத்து திசை மாற்றம்!!காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்தியா முழுவதும் தற்பொழுது 76 வது சுகந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது .இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் பல ஒத்திகைகள் பார்க்கப்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து அதிகாரிகள் இன்று முதல் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுகந்திர தினவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சுகந்திர தினவிழா ஆண்டு தோறும் விமர்சையாக சென்னை மாநகரில் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதனை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் சில ஒத்திகை நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது முதலாவதாக ஆகஸ்ட் 4 ம் தேதி அதவது இன்று தொடங்க உள்ளது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 10 மற்றும் 13 ம் தேதிகளில் மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.இந்த ஒத்திகை  நிகழ்ச்சியானது குதிரை படை ,கமாண்டோ படை மற்றும் பெண் காவலர் படை உள்ளிட்ட 7 படை பிரிவு வீரர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வீரர்கள் அனைவரும் அணிவகுத்து செல்வார்கள்.

மேலும் இதில் விருது வழங்குவது தொடர்பான ஒத்திகையும் நடத்தப்பட உள்ளது. எனவே ஆகஸ்ட் 10 மற்றும் 13  ஆம் தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளத்தால காலை 6 மணி முதல் போக்குவரத்து திசை மாற்றப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக நேப்பியர் பாலம் ,காமராஜர் சாலை ,ராஜாஜி சாலை ,கொடிமர சாலை போன்ற அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து தடை செய்யபடுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version