Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக மக்களுக்கு உற்சாக ட்விட் போட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரர்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் ஐபிஎல் தொடரில் நீண்ட வருடமாக மும்பை அணியில் விளையாடி வந்தார்.  தற்போது இரண்டு வருடமாக  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியின் போது அடிக்கடி தமிழில் டுவீட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.  கொரோனாவால் இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கி்ய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.  இதனை வலியுறுத்தும் வகையில் வெளியில் செல்லும்போது மாஸ்க் போடு என தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘வண்ணக்கம் சென்னை, தற்போது இது மிக மிக அவசியம். வெளியில் செல்லும்போது மாஸ்க் போடு’’ எனத் தெரிவித்துள்ளார்.
Exit mobile version