முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!!

0
265
Chennai team registered their first win!!

முதல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!!

இந்தியா கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 16- வந்து ஐபிஎல் போட்டிகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிகளில் ரசிகர்களால் அதிகம் விரும்பும் அணியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் தோல்வி அடைந்திருந்தாலும், இரண்டாவது ஆட்டம் இன்று லக்னோ அணியுடன் தங்களது சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது.

டாஸில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன் படி பேட்டிங் செய்ய வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் கான்வே ஆகியோர் ஆரம்பம் முதலே தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதின் மூலமாக ரன்கள் மலை போல் குவிய தொடங்கியது.

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் கெய்க்வாட் 57 ரன்களில் 3 பவுன்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும், அதே போல கான்வே 47 ரன்கள், சிவம் துபே 27, மெயின் அலி 19, பென் ஸ்டோக்ஸ் 8, ஒரு வழியாக சென்னை அணி 200 ரன்கள் கடந்தது.

ஆட்டத்தின் இறுதி ஓவரில் களம் கண்ட கேப்டன் தோனி தனது பங்கிற்கு இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டு அவுட்டானார். ஒரு வழியாக சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20-வது ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் தனது பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணி, ஓப்பனிங்கை நன்றாக தொடங்கிவிட்டு பினிசிங்கை சரியாக முடிக்காமல் திணறி தோற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக கெயில் மேயர்ஸ் 53 ரன்கள் எடுத்திருந்த போது அவுட்டானார். அதன் பின்னர் வந்த வீரர்கள் அணைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் எடுத்திருந்தது, இதன் காரணமாக சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதினை மெயின் அலி நான்கு ஓவர்களில் 26ரன்கள், 4 விக்கெட்டுகள், மற்றும் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த காரணத்தால் விருதினை தட்டி சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் தனது முதல் புள்ளி கணக்கை தொடங்கியது சென்னை அணி, வரும் சனிக்கிழமை தனது அடுத்த ஆட்டத்தில் மும்பை அணியை எதிர்கொள்கிறது.