Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையின் எப்.சி. அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்

சென்னையின் எப்.சி. அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹங்கேரியைச் சேர்ந்த சபா லாஸ்லோ நியமிக்கப்பட்டு இருக்கிறார். 56 வயதான லாஸ்லோ சர்வதேச மற்றும் கிளப் அணிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக இருந்த அனுபவம் வாய்ந்தவர். உகாண்டா, லிதுவேனியா ஆகிய தேசிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆனால் ஆசிய கண்டத்தில் பயிற்சியாளராக செயல்பட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

அவர் கூறுகையில் ‘சென்னையின் எப்.சி. ஒரு குடும்பம் போன்றது. முடிவு எப்படி அமைந்தாலும் எல்லா நேரமும் ஆதரவு தரும் ரசிகர்களை கொண்டது. இந்த குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை அணியை சிறந்த நிலைக்கு உயர்த்துவற்கு உதவி பயிற்சியாளர்களுடன் இணைந்து எல்லாவற்றையும் செய்வேன்’ என்று லாஸ்லோ குறிப்பிட்டார்.

Exit mobile version