Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

 

செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

 

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் என்ற பழமொழியிலும் தொடங்கி உரையாடலில் பிரதமர் அவர்கள் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர் கூறிய திருக்குறள் மிக தெளிவாக இருந்தது. மேலும் சிறப்பான ஒரு தருணத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு இருப்பதாகவும். தமிழகத்தில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களிலுள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம், தமிழ் மொழியின் தாயகமாகும். பல விளையாட்டுப் போட்டிகள் உலகத்தை ஒன்றிணைக்கின்றன. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டியது. என்று இவ்வாறு கூறினார். பின்னர் தன் உரையை முடித்தவுடன் முதலமைச்சரை உரையாற்ற அழைத்தார்.

 

 

Exit mobile version