Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக்கோப்பையில் இருப்பார்களா? தேர்வுக்குழு தலைவர் பதில்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் அடுத்த டி 20 உலகக் கோப்பையில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் நியுசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா. அப்போது அவரிடம் 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 போட்டிகளில் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் கோலி ஆகியோர் இடம்பெறுவார்களா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சேத்தன் “போட்டியின் நடுவில் நான் யாரிடமும் (அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி) பேசக் கூடாது. அவர்கள் அவ்வளவு பெரிய வீரர்கள், அவர்கள் எதையாவது பேசவேண்டும் என்றால் அவர்களே வந்து எங்களுடன் பேசுவார்கள், ”என்று கூறினார்.

மேலும் அவர் “நீங்கள் குறிப்பிட்ட வீரர்கள், அவர்கள் அணியில் இருந்தால், இளைஞர்கள் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். இந்த பெரிய வீரர்களிடமிருந்து இளைஞர்கள் எவ்வாறு கற்றுக்கொண்டு பயிற்சி பெறுகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். அவர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்றவர்களிடம் எப்படி சூழலைக் கையாளுவது என்று கேட்கிறார்கள்” எனப் பேசினார்.

மேலும் “அணிக்கதவுகள் யாருக்கும் ஒருபோதும் மூடப்படாது. நீங்கள் போட்டியிடும் பட்சத்தில் வயது என்பது ஒரு எண் மட்டுமே. நீங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை எடுத்தால், அனுபவமிக்க வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version