Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முக்கிய வீரர் மீதான விமர்சனத்திற்கு அதிரடியாக பதிலடி கொடுத்த ரோகித் சர்மா!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைதானத்தில் நடந்து வருகிறது இந்தியா முதல் இன்னிங்சில் 78 ரன்களில் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜோ ரூட் 124 ரன்னும் டேவிட் 7-வது ரன்னும் அசித் ஹமீது 68 ரன்னும் சேர்த்தார்கள் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்று 3-வது நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 91 கேப்டன் விராட் கோலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்கள். லோகேஷ் ராகுல் 9 ரோகித்சர்மா 59 ரன்னிலும் ஆட்டம் இழந்தார்கள்.

இன்றைய தினம் 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 139 ரன்கள் தேவை என்ற நிலையில் கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

நேற்றைய தின போட்டிக்குப் பின்னர் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா பேட்டி கொடுத்தார். அப்போது அவர் மீதான விமர்சனத்திற்கு பதில் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது புஜாரா ஒரு திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் இதை அவர் எப்போதும் உணர்த்தியிருக்கிறார் இருந்தாலும் ஒரு சில சமயங்களில் நம்முடைய நினைவுகள் தான் அதை மறந்து விடுகின்றன என்று கூறியிருக்கிறார் ரோகித் சர்மா.

நானும் புஜாராவும் ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் களமிறங்கினோம் புஜாரா அதில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய திறமை எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. அவர் தன்னுடைய பங்களிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் இன்னிங்சில் எங்களுடைய ஆட்டம் ஒட்டுமொத்தமாக மோசமாக இருந்து விட்டது. ஆனால் இன்றைய தினத்தில் இந்திய அணியின் ஜோடி நிலைத்து நின்று விளையாடினால் நன்றாக இருக்கும் என அவர் கூறியிருக்கிறார்.

கடைசியாக புஜாரா கடந்த 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார். அந்த போட்டியில் அவர் 193 ரன்கள் சேர்த்தார் அதன் பின்னர் அவர் சதம் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் அவர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார் புஜாராவின் சிறப்பான ஆட்டம் மூலமாக அவர் மீதான விமர்சனத்திற்கு ரோகித் சர்மா பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த டெஸ்டில் புஜாரா 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இன்றைய தினத்தில் அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version