காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!
தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
எனவே, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களான பொன்முடி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளிகள் அனைத்திற்கும் எப்போதுமே வாரத்திற்கு இரண்டு நாட்கள் என சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும்.
ஆனால் சனிக்கிழமையான இன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் அனைத்தும் இன்று செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டி முதலிய போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குமாறு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஏற்படும் செலவுகளை பள்ளி வளர்ச்சி அல்லது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியில் இருந்து செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.