பந்தை நாளா திசைக்கும் பறக்கவிட்ட கிறிஸ் கெய்ல்… ஐ.பி.எல். வரலாற்றில் புதிய மைல்கல்!
மும்பை வான்கடே மைதானத்தில் நான்காவது ஐபிஎல் லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய 222 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இதனிடையே இந்த ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடித்து 40 ரன்கள் எடுத்திருந்தார். அவர் அடித்த சிக்சர்கள் மூலம் அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்றை (ஏப்ரல் 12) ஆட்டத்தில் 7 ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசினார். அப்போது 3 ஆவது பந்தை கிறிஸ் கெயில் தனது வழக்கமான ஸ்டைலில் சிக்சர் அடித்தார்.
அதன் மூலம் அவரின் ஒட்டுமொத்த சிக்சர் கணக்கு 350 ஆக உயர்ந்தது. இதை அடுத்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய ஒரே வீரர் கிறிஸ் கெயில் என்ற சிறப்பை பெற்றார். மேலும் வேறு எந்த வீரரும் ஐ.பி.எல். போட்டியில் 250 சிக்சர்களையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.