Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!!

CM Stalin's next crazy plan!! Assistance for daughter who buys auto!!

CM Stalin's next crazy plan!! Assistance for daughter who buys auto!!

முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்!! ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகை!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது.

இன்று தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் மகளிர்களுக்கு எந்த வித பயண கட்டணமும் இல்லை என்று அரசு அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்தின் மூலம் மட்டும் பல சாமானிய பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் பெண்களுக்கான இன்னொரு சிறப்பு சலுகையும் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் புதிதாக ஆட்டோ வாங்கும் மகளிருக்கு உதவித்தொகையாக ரூ.1 லட்சம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த சலுகைகைகளை பெண்களுக்காக தமிழக அரசு செய்து வருகின்றது.

மேலும் இந்த ஆண்டில் 2500 கோவில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசானது ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Exit mobile version