முதல்வர் கோப்பைக்கான போட்டிக்கு செல்லும் வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து!! மகிழ்ச்சியில் வீரர்கள்!!
மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் சேலம் மாவட்ட மண்டல அளவில் நடைபெற்றது.
அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. ஆண், பெண் இருபாலருக்கும் தனி தனியாக மாவட்ட அளவில் 42 வகையானப் போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதில் சிலம்பம், கபடி, தடகளம், இறகுப்பந்து, கைபந்து, கால்பந்து, நீச்சல், கூடைப்பந்து போன்ற போட்டிகளும் நடைபெற்றது. இந்த போட்டிகள் ஜனவரி 27 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 49,481 பேர் கலந்து கொண்டார்கள்.
அதில் வெற்றி பெற்ற 657 மாணவ, மாணவியர்கள் மற்றும் 127 மேலாளார்கள் மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்கள். முதல்கட்டமாக மாநில அளவிளான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்ள தனி பேருந்து மூலம் வீரர்கள் சென்றுள்ளர்கள்.
சேலம் மாவட்டம் சார்பில் கலந்துகொள்ளும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு ஆட்சியர் கார்மேகம் அவரின் வாழ்த்தை தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களை வழி அனுப்பி வைத்தார். முதல்வர் கோப்பையை சேலம் மாவட்ட வீரர்கள் வென்று வருமாறு ஆட்சியர் கார்மேகம் கூறியுள்ளார்.