மக்களால் பாராட்டப்பட்ட வர்ணனையாளர்! ஆனால் அவரின் கருத்தினால் வசை பாடிய ரசிகர்கள்!
பொதுவாக கிரிக்கெட் என்றாலே நாம் அனைவருக்கும் மிகவும் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு நிகழ்ச்சியாகும். அதில் சில விளையாட்டு வீரர்களின் விளையாட்டு பலருக்கு பிடித்துப்போய் அவரை மிகவும் பாராட்டுவார்கள். அதுவும் கிரிக்கெட் பிடிக்காத இளவட்டங்களை இருக்க முடியாது என்று தான் கூற வேண்டும்.
பேட் வாங்க முடியாவிட்டாலும் கூட தென்னை மட்டையை பயன்படுத்தி கிரிக்கெட் விளையாடும் பழக்கம் பலரிடம் இருந்தது. கிரிக்கெட் பிடிக்காமல் இருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மிக குறைவாகவே இருப்பார்கள். அதில் உள்ள ஒவ்வொருவரும் பல மாணவர்களின் கனவு நாயகனாக இருப்பார்கள். அப்படி அந்த கிரிக்கெட் விளையாட்டில், இருந்த ஒரு வீரர், அதில் இருந்து தற்போது வர்ணனையாளராக மாறியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லைங்க நம்ப தினேஷ் கார்த்திக் தான் . இவர் இந்தியாவுக்காக 26 டெஸ்டு போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள், மற்றும் 32 டி20 ஆட்டங்களில் விளையாடி தமிழ்நாட்டில் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்தார். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இவர் தற்போது புது வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரபல ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்காக, வர்ணனையாளராக பணியாற்றியவர் பல பேரிடம் பாராட்டுகளைப் பெற்றார். இவரது வர்ணனை பல பேருக்கு பிடித்து போனது. தற்போது இவர் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரிலும் வர்ணனையாளராக பணியாற்றி வரும் நிலையில், இவரின் ஒரு முகம் சுளிக்கும் கருத்தினால் இணையத்தில் பலர் இவரை கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதாவது மிகவும் கடுமையாக அவருக்கு பதில் கொடுத்துள்ளனர். அப்படி அவர் என்ன செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம் இது நீங்கள் அந்த விளையாட்டு நிகழ்ச்சியை பார்த்து இருந்தால் இப்படி யாரும் கேட்க மாட்டீர்கள். இலங்கை இங்கிலாந்து 2வது ஒரு நாள் ஆட்டத்தின் வர்ணனையின் போது பேட்ஸ்மேன்கள் பயன்படுத்தும் பேட் பற்றி ஒரு மிகவும் மோசமான கருத்தை இவர் வெளியிட்டார். அந்த விளையாட்டின் போது வர்ணனையாளர்கள் வர்ணனை செய்து கொண்டிருந்த நேரத்தில், தினேஷ் கார்த்திக் பேட்களின் மீதான அதிருப்தி பேட்ஸ்மேன்களுக்கு எப்போதும் இருக்கும் எனவும், பெரும்பாலான விளையாட்டு வீரர்களுக்கு தங்களுடைய பேட்களை விட அடுத்தவர்களின் பேட்கள் தான் பிடிக்கும் என்றும், அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.
அதற்கு மேலும் உதாரணமாக ஒரு கருத்தை ஒன்றையும் சொன்னார். இதுவே அனைவரது வெறுப்பும் இவர் மேல் திரும்பும் அளவிற்கு செய்துவிட்டார். பேட் என்பது அடுத்த வீட்டு மனைவி போல தங்களுடைய பேட்டை விட மற்றும் பேட்ஸ்மேன்களின் பேட்கள்தான் எப்போதும் நன்றாக இருக்கும் என்பது போல ஒரு கருத்தினை அவர் பதி விட்டதன் காரணமாக பலர் இவரை கடுமையான சொற்களால் பேசி வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக்கின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக தொடங்கியது. பேட்டை எப்படி ஒரு வீட்டு மனைவியோடு ஒப்பிடலாம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். தனது மோசமான வர்ணனையின் காரணமாக இணையத்தில் பலரும் அவரை கழுவி கழுவி ஊற்றுகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இவரின் வர்ணனையை பலரும் பாராட்டி வந்த நிலையில், தற்போது இவரின் இந்த சம்பந்தமில்லாத கருத்து பல பேருக்கு இவரை பற்றிய வெறுப்பு எண்ணம் தோன்ற காரணமாகிவிட்டது.