பொது சிவில் சட்டம் நாட்டை சிதைத்துவிடும்!! அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!!
இந்திய நாட்டில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என்று பல்வேறு மதத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். அனைவரும் அவரவர் மதச் சட்டங்களை பின்பற்றி நடந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து மதத்தினரும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடர்பான விவரங்களுக்கு ஒரே சட்டமாக பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக தலைவர் வாக்குறுதியை அளித்திருந்தார்.
இது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இதனையடுத்து இதற்கான ஆலோசனை அறிக்கையை 21- ஆவது சட்ட ஆணையம், 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்தது. எனவே, ஐந்து ஆண்டுகள் கழித்து மத்திய சட்ட அமைச்சகம் இதை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் மத அமைப்புகளிடமிருந்து கருத்துக்களை கேட்டறிய தற்போது 22-ஆவது சட்ட ஆணையம் தீர்மானித்திருந்தது.
எனவே, பொது சிவில் சட்டத்திற்கான கருத்துக்களை பொதுமக்கள் முப்பது நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று இதற்கான கால அவகாசத்தை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை நீடித்துள்ளது.
இதனையடுத்து இந்த பொது சிவில் சட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை இந்த பொது சிவில் சட்டம் சிதைத்து விடும் என்று கூறி உள்ளார்.
மேலும், இந்த சட்டமானது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளையும் பறித்துவிடும். எனவே, இந்த முடிவை சட்ட ஆணையம் கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.