அனைத்து பள்ளிகளிலும் நாளை கட்டாயம்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் திறப்பது போல, ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என்று முடிவு செய்தது.
ஆனால் வெயிலின் தாக்கம் சிறிதும் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி முதலில் ஜூன் ஏழாம் தேதி என்று அறிவிப்பை வெளியிட்ட நிலையில்,
மீண்டும் திறக்கும் தேதி மாற்றப்பட்டு இறுதியாக ஜூன் பன்னிரெண்டாம் தேதி அன்று ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 14 ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், எப்போதுமே வாரத்திற்கு இரண்டு நாட்கள் என சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும்.
ஆனால் சனிக்கிழமையான நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை கர்மவீரர் காமராஜரின் 121 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவிய போட்டி முதலிய போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குமாறு தமிழக பள்ளிகல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.