Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

#image_title

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189  ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 175 முதல் கிளாஸ் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். ஆல்ரவுன்டரான இவர் டெஸ்ட் போட்டிகளில் 1990 ரன்களும், 216 விக்கெட்டுக்களையும் ஒருநாள் போட்டியில் 2942 ரன்களும், 239 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
49 வயதாகும் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவரது உடல் நலம் தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Exit mobile version