Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை.. 3 வது நீதிபதியால் பரபரப்பு!!

செந்தில் பாலாஜி அதிமுக கட்சியில் இருந்த பொழுது அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அவரை கைது செய்யும் நடவடிக்கையின் போது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேற்கொண்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஆட்கொணர்வு மனுவானது இரண்டு நீதிபதிகள் தலைமையில் அமர்வுக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பானது இரண்டு மாறுபட்ட கருத்தாகவே இருந்தது.ஒரு நீதிபதியானவர் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டது தவறு என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெரும் காலத்தை விசாரணை காலமாக கருதுவது அமலாக்கத் துறைக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என கூறி உத்தரவிட்டார்.

இதுவே மற்றொரு நீதிபதி, நீதிமன்ற காவலில் வைத்து தான் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து மிகவும் தவறு. அவர் உடல்நிலை சீராக அதற்கென்று தனியாக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில் மேலும் 10 நாட்கள் கூடுதலாக கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு செந்தில் பாலாஜி கட்டாயம் நீதிமன்ற காவலின் அடிப்படையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என உத்தரவிட்டார்.

இவ்வாறு இரு நீதிபதிகளில் மாறுபட்ட கருத்தால் தற்பொழுது மூன்றாவது நீதிபதியை நாடி உள்ளனர். அதன் அடிப்படையில் மூன்றாவது நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு அமர்வுக்கு வந்து அவரின் தீர்ப்பு தான் புதிய திருப்பத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மூன்றாவது நீதிபதியானவர் அமலாக்கத்துறை சட்டத்திற்கு புறம்பாக தான் கைது செய்துள்ளது எனவே தற்பொழுது மருத்துவமனையில் இருக்கும் பொழுது விசாரணை செய்ய எந்த ஒரு அதிகாரமும் இல்லை என உத்தரவிட்டால் மேற்கொண்டு மேல்முறையீடு வழக்கு போடப்படும் எனக் கூறுகின்றனர்.

அவ்வாறு தீர்ப்பளிக்கும் பட்சத்தில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய விடுதலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Exit mobile version