Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஸ்வின், ரிக்கி பாண்டிங் இடையே மோதலா?

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டிகள் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய தமிழ்நாட்டை  சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தார். அது பெரும் சர்ச்சையாக மாறியது.  மன்கட் முறை என்பது பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேனை கிரீசை விட்டு நகரும்போது பந்து  வீசுவதற்கு முன்பே ரன்-அவுட் செய்வது ஆகும்.

மேலும் இந்த முறை சரியானது தான் என்று அஸ்வின் கூறினார். அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக களம் இறங்க உள்ளார். இதுகுறித்து பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறும்போது எந்த காரணத்தை கொண்டும் மன்கட்’ முறையை பயன்படுத்தக்கூடாது  என அஸ்வினை எச்சரித்துள்ளார் அது விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. குறைந்தது டெல்லி அணியினர் இந்த வழியை கடைபிடிக்கக்கூடாது என்று விரும்புகிறேன் என்று கூறினார்.

 

 

Exit mobile version