Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை

Congress did not say it should not exist!! Dear Annamalai

Congress did not say it should not exist!! Dear Annamalai

காங்கிரஸ் இருக்கக்கூடாது என்று சொல்லவில்லை!! மிகவும் கெஞ்சிய அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய பாஜக தலைவரான அண்ணாமலை, பிரதமர் மோடி அவர்களின் காலில் இருக்கக்கூடிய நகத்தின் அழுக்கிற்கு கூட தகுதி அல்ல என்றார்.

அவரை பற்றி என்ன சொல்லுவது? அடுத்த முறை இதற்கான பதிலடியை நீங்களே கொடுப்பீர்கள். ஒரு மந்திரி எந்த ஒரு டெப்பாசிட்டுமே இல்லாமல் தோல்வியை தழுவி இருக்கிறார் என்னும் பெருமையை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கு கன்னியாகுமரி மக்கள் அடுத்த தேர்தலில் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை இன்றைக்கு மிகவும் குறைந்துள்ளது. ஒரு ஊருக்கு நான்கு பேர் தான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள்.

மேலும் ராகுல் காந்தியை நீக்கிவிட்டார்கள். காங்கிரஸ் வந்து நமது பிஜேபி சொந்தங்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கூட்டம் போட்டு பேசி வருகிறார்கள்.

பிறகு கல்லை எடுத்து பிஜேபி சொந்தங்கள் மீது வீசுகிறார்கள். மறுபடியும் பாஜக கட்சியினரும், காங்கிரசும் சண்டை போட்ட போது காவல் துறையினர் பாஜக தொண்டர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்பொழுது தர்மராஜ் அண்ணன் அவர்கள் போனில் அழைப்பு விடுத்து மோடி அவர்கள் காங்கிரஸ் மூக்த்து பாரத் என்று சொல்லி இருக்கிறார். கன்னியாகுமரியில் அதை செய்வதாக அவரிடம் மிகவும் கெஞ்சி கேட்டேன்.

மோடி அவர்கள் சொல்லிய காங்கிரஸ் மூக்த்து பாரத் என்பது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது. காங்கிரஸ் இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை என தெரிவித்தாக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை கூறினார்.

Exit mobile version