Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது!

#image_title

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் உள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷன் சிங்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் டெல்லி காவல்துறை சரண் சிங் மீது இரண்டு வழக்கு பதிவு செய்தது.

இந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரண் சிங் தான் ராஜினாமா செய்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல எனவும் தான் ராஜினாமா செய்தால் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை தான் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் ஆகி விடும் என தெரிவித்தார்.

தன்னுடைய பதவி காலம் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் மத்திய அரசு தேர்தலை நடத்த மூன்று நபர் குழுவை அமைத்து இருப்பதாகவும் தேர்தல் முடிந்த பிறகு தன்னுடைய பதவியும் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் மல்யுத்த வீரர்கள் புதுவிதமான கோரிக்கைகளை முன் வைப்பதாக தெரிவித்தவர் முதலில் தன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தவர்கள் தற்போது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதும் தன்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் என கூறுவதாகவும் தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது தன் தொகுதி மக்கள் தானே தவிர வினேஷ் போகட் அல்ல என தெரிவித்தார்.

மல்யுத்த வீரர்களின் இந்த போராட்டத்திற்கு பின்னால் சில தொழிலதிபர்களும் காங்கிரஸ் கட்சியும் உள்ளனர் என தான் தொடர்ந்து கூறி வருவதாக தெரிவித்தவர் இது மல்யூத்த வீரர்களின் போராட்டம் அல்ல என தெரிவித்தார்.

போராடிவரும் மல்யுத்த வீரர்கள் 12 ஆண்டுகளாக தன்மீது காவல்துறையிலோ அல்லது விளையாட்டு அமைச்சகத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை.

என தெரிவித்த அவர் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்த வீரர்கள் தன்னை பாராட்டி பேசி இருப்பதோடு தன்னை தங்கள் வீட்டு திருமணத்திற்கு அனைத்து தன்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் அவர்களின் முடிவை தான் ஏற்றுக் கொள்வேன் என குறிப்பிட்டார்.

Exit mobile version