Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைக்கு கொரோனா

இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.  தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் போகத்துக்கு கொரோனா கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.   விருது வழங்கும் விழாவிற்கான ஒத்திகைக்கு முன் சோன்பேட் நகரில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் நன்றாகவே இருக்கிறேன்.  விரைவில் நலம் பெறுவேன் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Exit mobile version