மீண்டும் கரோனா பரிசோதனை தொடக்கம்!! சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்!!
நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கரோனா என்ற கொடிய நோய் நம் அனைவரையும் வாட்டி வதைத்து வந்தது. உலகம் முழுவதும் இந்த கொடிய நோயால் கோடிக்கணக்கான மக்கள் இறந்து விட்டனர்.
சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு மக்கள் அனைவரும் அதை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை பறிகொடுத்து வந்த நிலையில்,
தற்போது கரோனா பாதிப்பே தமிழகத்தில் பதிவாகாத நிலை ஏற்பட்டுள்ளது. பல பேருக்கு சளி, காய்ச்சல் இருந்தாலும் அவர்கள் கரோனா பரிசோதனைக்கு வராமல் இருப்பது கூட இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மறுபக்கம், கரோனா விற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் அதை செலுத்தி வந்ததாலும் கூட இந்த கரோனா பாதிப்பு குறைந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
இந்த நிலை குறித்து தற்போது பேசிய சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு மிகக் குறைவான அளவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
தற்போது பாதிப்பே இல்லாத நிலையும் பதிவாகி உள்ளது. இவ்வாறு இருந்தாலும் கூட கரோனா நோய்க்கான பரிசோதனை செய்யப்படும் என்று கூறி உள்ளார்.
இதற்கான கண்காணிப்பு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த ஒரு சமரசமோ இருக்காது. இதேபோல், பருவக் காலங்களில் பரவும் நோய்களான சிக்கன்குன்யா, மலேரியா, டெங்கு, எலிக்காய்ச்சல் ஆகியவற்றின் பாதிப்புகளைக் கண்காணித்து தகவல் அளிக்க வேண்டும்.
மேலும் கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.