Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Corona: Vanathi Srinivasan confirmed corona infection!! A sudden announcement by the hospital!!

Corona: Vanathi Srinivasan confirmed corona infection!! A sudden announcement by the hospital!!

Corona: வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி!! மருத்துவமனை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்தனர். அது மட்டுமின்றி ஜப்பானில் கொரோனா தொடர்புடைய வைரஸ்கள் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த சூழலில் தற்பொழுது பாஜக எம்எல்ஏவான வானதி சீனிவாசனுக்கு கொரோனா தொற்று பாதிப்பானது உறுதியாகியுள்ளது.

இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு அவருக்கு கொரோனா தொடர்பான சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அடுத்தடுத்த அவர் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளனர். மீண்டும் கொரோனா தொற்றானது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடன் இருப்பது அவசியம்.அதுமட்டுமின்றி  கூட்டத்திலிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம்  அணிய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version