Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் வாரியம்

கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிகின்றன. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில் விளையாட்டுத் துறைகளும் பாதிக்கபட்டுள்ளன. எந்தவித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடங்க இருந்தன. ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா தீவிரமாக பரவி வருவதால் போட்டியை இங்கு நடத்துவது கடினம்.

அதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19- ந்தேதி தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைவரும் மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இந்த பாதுகாப்பான சூழலை விட்டு யாராவது விலகினால் அவர்கள் மீது ஐ.பி.எல். நடத்தை விதிமுறைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

 

Exit mobile version