Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிய நியூசிலாந்து அணியின் கேப்டன்! தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றியடைந்து இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி வெலிங்டனில் நடைபெறுவதாக இருந்தது. பின்பு மழையின் காரணமாக, அது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மவுண்ட் மவுன்கனூரில் நடந்த 2வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், 3வது மற்றும் கடைசி போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று பகல் 12 மணியளவில் ஆரம்பமாகிறது. இதில் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக்கத்தில் இருக்கிறது.

அதே சமயத்தில் சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் சமன் செய்ய நியூசிலாந்து அணியின் வீரர்கள் தீவிரமாக களமிறங்குவார்கள் என்ற காரணத்தால் பல வியூகங்களை வகுத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக, இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதற்கு நடுவே முழங்கை காயம் குறித்து கேன் மில்லியன்சன் இன்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறார். ஆகவே இந்த போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியை டிம் சவூதி வழி நடத்த உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version