Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்… 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்…

 

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின்.போட்டிகளை காண்பதற்கு இரசிகர்கள் அனைவரும் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகின்றது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து உலகக் கோப்பை தொடரை நேரில் காண்பதற்கு இரசிகர்கள் இன்று முதல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

ஒருநாள் உலகக் கோப்பை தொடரை மைதானத்திற்கு நேரில் காண வரும் நபர்கள் அனைவரும் இன்று(ஆகஸ்ட்15) முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இரசிகர்கள் அனைவரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வரை டிக்கெட்டுகளுக்கான முன்பதிவை செய்து கொள்ளலாம். இதில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற வரும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Exit mobile version