Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஓய்வு முடிவை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்?

தென்ஆப்பிரிக்காவின் முன்னணி ஆல்ரவுண்டர் பிலாண்டனர். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக பேட்டிங் செய்பவர் 34 வயதாகும் இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் சொந்த மைதானமான கேப்டவுன் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் .

தென்னாப்பிரிக்காவில் வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகளாக விளங்கும் ஸ்டெய்ன் மோர்னி மோர்க்கல் ஆகிய இருவரும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் தற்போது பிளாண்டரும் ஓய்வு முடிவு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

34 வயதான பிலாண்டர் 60 டெஸ்ட் போட்டிகளில் 216 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். அதில் 13 முறை ஐந்து விக்கெட்டுக்களும், இரண்டு முறை 10 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார். 30 ஒருநாள் போட்டியில் 41 விக்கெட்டும், 7 டி20 போட்டியில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 8 அரைசதங்களுடன் 1619 ரன்கள் அடித்துள்ளார்.

Exit mobile version