அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்… 

0
103

 

அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன்அவுட் ஆன கிரிக்கெட்டர்… இணையத்தில் வீடியோ வைரல்…

 

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த கிரிக்கெட்டர் ஆல்ரவுண்டர் ரக்கீம் ஹார்ன்வால் அவர்கள் அதிக எடை காரணமாக ஓட முடியாமல் ரன் அவுட் ஆன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

தற்பொழுது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ளூர் தொடரான கரீபியன் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சியின் லூசியா கிங்ஸ் அணியும், பார்படாஸ் ராயல்ஸ் அணியும் மோதியது.

 

இதில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்க்ஸ் அணி முதலில் பேட் செய்தது. இதையடுத்து 20 ஓவர்களின் முடிவில் செயின்ட் லூசியா கிங்க்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. 202 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணயால் 10 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பார்படாஸ் ராயல்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

இந்த போட்டியில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக ரக்கீம் கார்ன்வால் தொடக்க வீரராக களமிறங்கினார். இதில் ஒரு ரன் கூட எடுக்காமல் முதல் பந்திலேயே ரன் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். ரக்கீம் கார்ன்வால் மிகவும் குண்டாக இருப்பதால் அவரால் ஒரு ரன் கூட ஓட முடியவில்லை. இதையடுத்து அவர் ரன்அவுட் ஆன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் ரக்கீம் கார்ன்வால் அவருடைய உடல் எடையை குறைத்து ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

 

அதிக வெயிட்டான வீரர் என்று அழைக்கப்படும் ரக்கீம் கார்ன்வால் மைதானத்திற்கு வரும் பொழுது எல்லாம் ரசிகர்களின் கவனத்தை பெற்றுவிடுகிறார். போட்டிகளில் சொதப்பும் பொழுது எல்லாம் ரசிகர்களின் பேசுபொருளாக ரக்கீம் கார்ன்வால் மாறி விடுகிறார். மேற்கிந்திய தீவுகள் நாட்டின் தேசிய அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ரக்கீம் கார்ன்வால் என்னதான் உணவுமுறையை சரியான விகிதத்தில் வைத்திருந்தாலும் ஆடுகளத்தில் அவரால் விளையாட முடியாமல் போவதை காண முடிகின்றது.

 

இது குறித்து ரக்கீம் கார்ன்வால் “நான் குண்டான ஆள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால் என் உடலை குறைக்க நான் இன்னும் பயிற்ச்சி செய்ய வேண்டும். உடல் எடை அதிகமாக இருப்பது தான் எனக்கு கவலையாக இருக்கின்றது. அதே சமயம் நான் சோம்பேறி எல்லாம் இல்லை. உடல் எடையை குறைக்கவும் உடல் தகுதிக்காகவும் நிறைய நேரம் செலவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

ஆல்ரவுண்டராக செயல்படும் ரக்கீம் கார்ன்வால் மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணிக்காக சில போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் பந்துவீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.