Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

CSKvsPBKS: கிரிக்கெட் களத்தில் காதல் வலை வீசிய CSK வீரர்

Chennai Super Kings

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபில் போட்டியின் போது, CSK வீரர் ஒருவர் தனது காதலிக்கு தன் காதலை தெரிவித்துள்ளார்.

விளையாட்டுக்கு வருகையில், பஞ்சாப் கிங்ஸ் துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ஃபாஃப் டு பிளெசிஸ் 55 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார், அர்ஷ்தீப் சிங் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

                                                   

இந்த ஆட்டத்தின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் தனது காதலி ஜெயா பரத்வாஜுக்கு பஞ்சாப் தன்னுடைய காதலை முன்மொழிந்தார்.

ஜெயா முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் சித்தார்த் பரத்வாஜின் சகோதரி. சாஹர் ப்ரபோஸ் செய்த அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பொழுது இந்த காதல் ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version