கோப்பையை வென்று தந்த கேப்டன், ரஸ்ஸல் நீக்கம்!! KKR அணியின் அதிர்ச்சி தகவல்?

0
188
Cup-winning captain, Russell sacked

IPL:கடந்த ஆண்டு கோப்பை வென்ற KKR கேப்டனை விடுவிக்கபோவதாக அந்த அணி நிர்வாகம் அதிர்ச்சி தகவல்

ஐபிஎல் ல் பங்கேற்றுள்ள அணிகள் தங்களது தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை இந்த மாதம் அக்டோபர் 31 ம் தேதி அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்படி அணிகள் அவர்களின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் சிறந்து விளங்கும் கிரிகெட் தொடர்களில் மிக முக்கியமான தொடர் ஐ பி எல் தொடர் இந்திய முழுவதும் இதற்கென தனி பட்டாளமே உள்ளது. இந்த ஐபிஎல் தொடரின் 2025 க்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நவம்பர் கடைசியில் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

கடந்த 2024 ஐ பி எல் தொடரில் கோப்பையை வென்றது கொல்கத்தா அணி. இந்த சீசனில் KKR அணி எந்த வீரர்களை தக்க வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு KKR அணியின்  கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை இந்த ஆண்டு விடுவிக்க உள்ளதாக  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து அந்த அணிக்காக நீண்ட ஆண்டுகளாக விளையாடி வரும் அன்ட்ரே ரஸ்ஸலையும் விடுவிக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் மெகா ஏலத்திற்கு முன்னதாக KKR அணி சுனில் நரைன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவர்களையும் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களாக தக்க வைக்க உள்ளது. ஹர்ஷித் ராணாவை உள்ளூர் வீரராக தக்கவைக்க உள்ளது. இந்த நான்கு வீரர்களை மட்டும் KKR அணி தக்கவைக்க உள்ளது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.