Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

‘தலைவா யுவர் கிரேட்’ டேவிட் வார்னரின் புதிய அவதாரம்!! தளபதி 2.0 வெர்ஷன் வைரல் வீடியோ!!

கோலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகராக இருக்கக்கூடியவர்தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

தற்போது தளபதி விஜய், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பீஸ்ட் என்கிற ஒரு படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆக இருக்கக் கூடியவர் தான் டேவிட் வார்னர்.

இவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக அடிக்கடி வித்தியாசமான வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இதற்கு முன்பாக டேவிட் வார்னர் தர்பார் படத்தில் வரும் ரஜினி மற்றும் பாகுபலி பிரபாஸ் மாதிரி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

அத்துடன் தற்போது தெறி படத்தில் தளபதி விஜய் போல் மாறி இருக்கின்றார். தெறி படத்தில் விஜய் நடனம் ஆடிய செல்லாகுட்டி என்ற பாடலில் உள்ளது போல் மிகவும் ஸ்டைலாக மாறி உள்ளார். அத்துடன் இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவை மிகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த வீடியோவைக் கண்ட தளபதி ரசிகர்கள் ‘தலைவா யுவர் கிரேட்’ என்றும், இது என்ன தளபதி 2.0 வெர்ஷனா? என்றும் கூறுகின்றனர்.

Exit mobile version