கொரோனா வைரஸ் உலகத்தையே புரட்டி போட்டு வரும் நிலையில் இந்த வைரஸால் உலகமெங்கும் விளையாட்டு போட்டிகள் ஏதும் நடக்கவில்லை.குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை காணாமல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
எனவே அவர்கள் தங்களுடைய பொழுதுப்போக்கிற்காக இன்ஸ்டா, டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.மேலும் இன்ஸ்டா போன்ற வலைதளங்களில் சக விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர் நேரலையில் உரையாடி கொண்டிருக்கின்றனர்.

இந்தியா இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வார்னர் தன்னுடைய கருத்து ஒன்றை வெளியிட்டார். இதில்,நான் கூட்டத்தில் தான் வளர்கிறேன் மேலும் களத்தில் என்னை மற்றவர்கள் சீண்டி பார்ப்பதாலும் வளர்கிறேன் போன்ற தன்மைகள் விராட்டுக்கு உரியவை ,வீராட்டை சீண்டுவது கரடியை சீண்டுவது ஆகும்.
அப்படி அவரை சீண்டினால் தாக்குதலுக்கு ஆளாவீர்கள். மேலும் அவர் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளார்.இதனை நாம் பார்த்து கொண்டு தான் உள்ளோம் என கூறியுள்ளார். மேலும் பேசியவாறு விராட் கோலியை சீண்டுவதை ஆஸ்திரேலியா வீரர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என வார்னர் கூறியுள்ளார்.