Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையை தோற்கடித்து முதலிடம் பிடித்த டெல்லி அணி.!!

நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் 50வது லீக் போட்டியில் முதலிடத்தில் உள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதுன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ரிதுராஜ் மற்றும் மற்றும் டுப்லஸ்ஸிஸ் களமிறங்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி டுப்லஸ்ஸிஸ் 10 ரன்களிலும், ரிதுராஜ்13 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய உத்தப்பா 19 ரன்களிலும், மொயின் அலி 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க கேப்டன் தோனி 27 பந்துகளை சந்தித்து வெறும் 18 ரன்களை மட்டுமே எடுத்து அவரும் ஆட்டமிழந்தார்.

சென்னை அணியில் அம்பத்தி ராயுடு மட்டும் அதிகபட்சமாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் 55 ரன்களை குவித்தார். இதன்மூலம் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை எடுத்தது.

அதனைத் தொடர்ந்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர்.

ப்ரித்திவ் ஷாவ் வந்த வேகத்தில் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி ஓரளவு ரன்களை குவித்தார். ஆனால் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், ரிஷப் பண்ட் 15 ரன்களிலும், ரிபல் பட்டேல் 18 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க போட்டி பரபரப்பாக கடைசி ஓவர் வரை இந்த ஆட்டம் நடைபெற்றது.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 6 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணி 19.4 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.

Exit mobile version