Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

#image_title

6000-த்தை தாண்டிய பலி எண்ணிக்கை!!! 10000 பேர் மாயமாகி உள்ளனர்!!! லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்தய விளைவு!!!

லிபியாவில் நிலநடுக்கம் ஏற்படுத்திய வெள்ளப் பெருக்கினால் பலியானவர்களின் எண்ணிக்கை 6000-த்தை தாண்டியுள்ளது. மேலும் 10000க்கும் மேற்பட்டோர் மாயாமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் மத்திய தரைக்கடல் பகுதியான அயோனியன் கடலில் டேனியல் புயல் உருவானது. இந்த டேனியல் புயல் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வட ஆப்பிரிக்க நாடான லிபியாவை தாக்கியது. லிபியாவில் உள்ள பங்காசி பகுதியில் டேனியல் புயல் கரையை கடந்தது. இந்நிலையில் லிபியா நாட்டின் கடலோரப் பகுதிகளை பெருமளவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

டேனியல் புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் லிபியா நாட்டில் டெர்னா பகுதியில் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டது. டெர்னா பகுதியில் உள்ள அணைகள் நிரம்பி 7 அடிக்கு உயரத்திற்கு தண்ணீர் எழும்பி டெர்னா நகர் முழுவதையும் அழித்தது.

டேனியல் புயல் ஏற்படீத்திய தாக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. டெர்னா நகர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை டேனியல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு லிபியா நாட்டில் 6000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10000க்கும் மேற்பட்ட மக்கள் மாயமாகியுள்ளனர்.

மேலும் சாலைகளில் இருந்தும் கட்டட இடிபாடுகளில் இருந்தும் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாயமான 10000 மக்களை தேடும் பணியில் மீட்புத் துறையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். துருக்கி, எகிப்து, அல்ஜீரியா, துனிசியா ஆகிய நாடுகள் லிபியாவிற்கு நிவாரணங்கள் வழங்கி வருகின்றது. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவும் லிபியாவிற்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.

 

Exit mobile version