Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிகிரி? டிப்ளமோ? ITI? எது பெரிது!! இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

டிகிரி? டிப்ளமோ? ITI? எது பெரிது!! இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!

தினமும் ஏராளமான படிப்புகளை எடுத்து அதில் பட்டம் பெற்று வேலைவாய்ப்பை வாங்கி வருகிறோம். எனவே அந்த வகையில் பட்டப்படிப்புகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது ITI, Diploma, Degree இந்த மூன்று படிப்புகளையும் பற்றி தனித்தனியாக இங்கு தெரிந்து கொள்வோம். இந்த மூன்று படிப்புகளும் என்ன அதனால் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ITI ( industrial training institute) அதாவது தமிழில் தொழில் கல்வி பயிற்சி மையம் ஆகும். இது அரசாங்கம் மற்றும் தனியார் என்று இரண்டுமே இந்த பயிற்சி மையங்களை வைத்து நடத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ஐடிஐயில் ஒரு படிப்பை இரண்டு வருடங்களுக்கு படிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு தொழில் கல்வியை அப்படியே நடைமுறை அறிவாக ( practical knowledge) கற்றுத் தந்து விடுவார்கள்.எனவே இதை கற்றுக்கொண்டு நாம் வெளியே வரும்போது நிச்சயமாக நம் கையில் ஒரு வேலை இருக்கும் மேலும் அரசாங்கத்திலேயே தாராளமாக வேலை வாங்க முடியும்.

அடுத்து நாம் தெரிந்து கொள்ள போவது தான் டிகிரி. அதாவது டிகிரி என்பது நாம் arts அல்லது science அல்லது பொறியியல் படிப்பின் மூலமாக வாங்கக்கூடியது தான் டிகிரி ஆகும். ஐடிஐ மற்றும் டிப்ளமோ வில் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் இந்த டிகிரி படிப்பில் உள்ளது. அது என்னவென்றால் நாம் டிகிரி படித்திருந்தால் டிஎன்பிஎஸ்சியில் குரூப்-1 குரூப் 2 போன்ற தேர்வுகள் மற்றும் யுபிஎஸ்சி தேர்வுகளை எழுதுவதற்கு நாம் தகுதியானவர்கள் அதுவே ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்திருந்தால் இந்த தேர்வுகளுக்கு தகுதியற்றவர்கள். எனவே டிகிரி படித்திருந்தால் இந்த தேர்வுகளை எழுதி அரசாங்கத்தில் நாம் வேலை வாங்க முடியும்.

அடுத்து டிப்ளமோ படிப்பை பற்றி தெரிந்து கொள்வோம். பொறியியல் படிப்பிற்கான முதல் கட்டம் தான் டிப்ளமோ என்று கூறுவார்கள். இந்த டிப்ளமோவில் 50 சதவிகிதம் நடைமுறை அறிவையும் 50 சதவிகிதம் பாடத்தின் கதையையும் நமக்கு கற்றுத் தருவார்கள். இந்த டிப்ளமோ வில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மூன்று ஆண்டுகளும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இரண்டு ஆண்டுகளும் படிப்பார்கள்.

இதுதான் ஐடிஐ டிப்ளமோ டிகிரி என்ற மூன்று படிப்பிற்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் ஆகும் எனவே படிப்பை தேர்ந்தெடுக்கும் போது இதெல்லாம் தெரிந்து கொண்டு விருப்பமுள்ள படிப்பை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

 

Exit mobile version