Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

Delhi batsman scores a double century in 20 overs! An army of happy fans!

Delhi batsman scores a double century in 20 overs! An army of happy fans!

20 ஓவர்களில் இரட்டை சதம் அடித்த டெல்லியின் வீரர்! மகிழ்ச்சியில் ரசிகர் பட்டாளம்!

கிரிக்கெட்டில் சதம் அடிப்பது என்றால் சாதாரண விஷயம் அல்ல. அதற்கு அவர்கள் நிறைய  பயிற்சிகள் மேற்கொண்டு இருக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுக்கும் பட்சத்தில் போட்டி நடக்கும் இடத்திலும், அவர்கள் சரியாக விளையாட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும்.அப்போது கிடைக்கும் வெற்றி அவர்களுக்கு மட்டுமின்றி எந்த நாட்டிற்காக ஆடுகிறார்களோ, அந்த நாடு மற்றும் எந்த குழுவில் சேர்ந்து ஆடுகிறார்களோ, அந்த குழுவிற்கும் கிடைக்கும் வெற்றியாக கருதப்படும்.

டெல்லியில் கிரிக்கெட் இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில் விளையாடிய சுபோத் பாட்டி என்பவர் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்தார். இதில் 17 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் 20 ஓவர் போட்டிகளில் முதல் முதலாக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சுபோத் பாட்டி என்ற 30 வயதாகும் நபர் அடிப்படையில் ஒரு பவுலர் ஆவார்.

மேலும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் டெல்லி அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சுபாஷ் சுபோத் பாட்டி அந்த அணிக்காக ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைகளில் விளையாடி வருகிறார்.

இவரை தொடர்ந்து சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக அவுட் இல்லாமல் 66 பந்துகளில் 175 ரன்கள் விளாசியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 172 ரன்களை விளாசியுள்ளார். அடுத்த இடத்தில்  மசகட்சா இருக்கிறார். இவர் அவுட் இல்லாமல் 71 பந்துகளில் 162 ரன்கள் விளாசி இருக்கிறார். இப்போது இவர்கள் ஒட்டுமொத்த சாதனைகளையும் இந்திய வீரர் சுபோத் தகர்த்து சாதனை படைத்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version