மீண்டும் மெதுவாக பந்துவீசிய டெல்லி கேபிடல்ஸ்! கடும் அபராதம் விதித்த பிசிசிஐ!
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய(ஏப்ரல் 3) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராகவும் மெதுவாக பந்து வீசிய காரணத்திற்காக பிசிசிஐ டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பந்த்க்கு கடும் அபராதம் விதித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பேட் செய்தது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 20 ஓவர்களில் 273 ரன்கள் என்ற இலக்கை கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீசும் பொழுது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச தவறியதால் டெல்லி அணியின் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்றைய(ஏப்ரல்3) போட்டியிலும் டெல்லி கேபிடல்ஸ் அணி மெதுவாக பந்து வீச தவறியதால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அவர்களுக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இரண்டாவது முறை என்பதால் அணியின் மற்ற வீரர்கள், இம்பேக்ட் பிளேயர் ஆகியோர்களுக்கும் 6 லட்சம் அல்லது போட்டியின் சம்பளத்தில் 25 சதவீதம் இதில் எது குறைவோ அது அபராதம் விதிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
மூன்றாவது முறையாக மெதுவாக ஒரு அணி பந்து வீசும் பொழுது 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் கேப்டன் ஒரு போட்டியில் இருந்து விலக்கப்படுவார். அது மட்டுமில்லாமல் அந்த அணியில் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் 12 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது போட்டியின் சம்பளத்தில் 50 சதவீதம் இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும்.