Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிஸ்ட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

வெளியேறியதா டெல்லி, லக்னோ? புள்ளி பட்டியலில் செம்ம டிவிட்! முடிவு சன் ரைசஸ் கையில்!

IPL POINT

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேக் ஃப்ரேசர் முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் அபிஷேக் போரல் – ஷாய் ஹோப் அதிரடியாக ஆடினர். இதில், 4 சிக்சர்களுடன் 22 பந்துகளில் 53 ரன்களைச் சேர்த்த அபிஷேக் நவீன் உல் ஹக் பந்து வீச்சில் அவுட்டானார்.

நிதானமாக விளையாடிய ஷாய் ஹோப், கேப்டன் ரிஷப் பந்த் 33 ரன்களுடன் அவுட்டாகினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 208 ரன்களை குவித்தது.

இதனையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. அதேபோல் தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 5 வது இடத்தில் உள்ள டெல்லி அணிக்கு வாய்ப்பு குறைவு தான்.

காரணம் ஏற்கனவே முதல் இரண்டு இடங்களில் உள்ள RR & KKR பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்து ஆட உள்ள இரு ஆட்டங்களில் மிக மோசமான தோல்வியை பதிவு செய்தால் மட்டுமே டெல்லி, லக்னோ அணிகளுக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Exit mobile version