மீண்டும் படையெடுக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! தடுக்க அரசின் அதிரடி நடவடிக்கை!!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இப்பொழுது எலி காய்ச்சல் மற்றும் டெங்கு அதி தீவிரமாக பரவி வருகின்றது.அதனால் தமிழ்நாட்டில் அதன் எல்லையோர மாவட்டங்களில் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்காணிப்பு பணி துவங்கப்பட உள்ளது.
மேலும் தமிழக எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது.
இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . அந்த வகையில் இந்த கொசுக்கள் மக்களை கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தினசரி நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 என்ற எண்ணிக்கை வரை மக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.இதில் 70 சதவீதம் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை போன்று இப்பொழுது கர்நாடக மாநிலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. தற்பொழுது கேரளா உட்பட பெங்களூர் ,ஒடிசா,புவனேஷ்வர்,டெல்லி போன்ற பல்வேறு மாநில மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வகையில் டெல்லி அரசானது டெங்கு காயிச்சலை தடுக்கும் விதமாக அந்த மாநில மக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இனி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் தேங்கவிடும் குடியிருப்பு மற்றும் நிறுவங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.