Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து அனைத்து விதன்மான விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கிரிக்கெட்  போட்டியை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்பாடு செய்தன. இதற்க்கு சம்மதம் தெரிவித்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சென்று கடந்த 8-ந்தேதி முதல் விளையாட தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.
மேலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட அயர்லாந்து அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இதற்காக 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது.  வீரர்கள் அனைவரும் நேற்று இங்கிலாந்து சென்றனர். அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அசார் அலி (கேப்டன்), 2. பாபர் அசாம் (துணைக் கேப்டன்), 3. அபித் அலி, 4. ஆசாத் ஷபிக், 5. பஹீம் அஷ்ரஃப், 6. பவத் அலாம், 7. இமாம் உல் ஹக், 8. இம்ரான் கான், 9. காஷிஃப் பாத்தி, 10. முகமது அப்பாஸ், 11. முகமது ரிஸ்வான், 12. நசீம் ஷா, 13. சர்பராஸ் அகமது, 14. ஷதாப் கான், 15. ஷாஹீன் ஷா அப்ரிடி, 16. ஷான் மசூட், 17. சோஹைல் கான், 18. உஸ்மான் ஷின்வாரி, 19. வஹாப் ரியாஸ், 20. யாசீர் ஷா.
Exit mobile version