Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று தல தோனியின் பிறந்த நாள்! குவியும் வாழ்த்துக்கள்

dhoni

dhoni

எந்த ஒரு பெயரை சொன்னால் அரங்கங்கள் அதிரும்மோ!! எந்த ஒரு வீரர் களமிறங்க நாடே காத்திருக்குமோ!!!எந்த ஒரு வீரரின் விளையாட்டை காண விடியலுக்கு முன்பே அரங்கங்களில் முன் கூட்டம் குவியுமோ!!!!அவரே தோனி கிரிக்கெட் விளையாட்டின் மாபெரும் வீரர்.

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் “தல தோனிக்கு” இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கடந்து வந்த பாதை:

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனப்படும் சிற்றூரில் இவர் ஜூலை 7 1981 அன்று பிறந்தார்.

இவருடைய இயற்பெயர் “மகேந்திர சிங்”ஆகும். இவர் இவரது தந்தை பெயரான தோனியை இவரது பெயரோடு இணைத்து மகேந்திர சிங் தோனி என தனது மேடை பெயரை அமைத்துக்கொண்டார். ஆனால், ரசிகர்கள் இவரை மகேந்திரசிங் என அழைப்பதை விட தோனி என அழைப்பதில் இஷ்டம் அதிகம்.

சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் தோனி .தனது விளையாட்டு ஆசிரியரின் ஆணைக்கிணங்க கிரிக்கெட் விளையாட தொடங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு வெறுப்பாய் இருந்த கிரிக்கெட் விளையாட்டு பின்னர் அவரது வாழ்க்கையாக மாறியது.

தோனி இந்திய அணிக்காக விளையாண்ட நாள் தொட்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இந்தியா பல்வேறு கோப்பைகளை வெல்ல முழுமுதற் காரணமாக அமைந்தவர் தோனி.2011ஆம் உலக கோப்பை இந்தியாவில் மிகப்பெரிய காரணம் எம்எஸ் தோனியின் அபாரமான ஆட்டமே.

மக்களால் செல்லமாக “தல” என அழைக்கப்படும் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் எனப்படும் இந்தியாவின் உட்பிரிவு அணிக்காக 2007 முதல் கேப்டனாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை அந்த அணி மூன்று முறை கோப்பையை வசப்படுத்தியுள்ளது.

விளையாடும்போது கிடைப்பது வெற்றியோ, தோல்வியோ ஆனாலும் விளையாட்டு முழுவதும் நிதானத்தை கடை பிடிப்பவர் எம்எஸ் தோனி இதனாலே இவருக்கு” கேப்டன் கூல்” என புனைப்பெயர் உண்டானது. தோல்வி அடையும் பொழுதும் புன்சிரிப்பை முகத்தில் வைத்திருப்பார்.

இவர் ஒரு நாள் போட்டியிலும் இந்தியாவுக்காக பெரும் பங்காற்றி இருக்கிறார் இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட அரைசதங்கள் ,72 சதங்கள் விளாசியுள்ளார் .ஒரு விக்கெட் கீப்பராக 123 ஸ்டம்பிங் ஒருநாள் போட்டியில் நிகழ்த்திய முதல் இந்திய வீரர் எம்எஸ் தோனி.

ஒரு வருடத்திற்கு முன்பு இவர் தன்னுடைய ஆய்வறிக்கையை ரசிகர்களுக்கு அறிவிக்கும்போது கண்ணீர் சிந்திய ரசிகர்களில் நானும் ஒருவன் .ஆயினும் இத்தனை ஆண்டுகள் எங்களுக்கு சிறப்பான விளையாட்டை காண்பித்த எங்க தல தோனிக்கு மற்றொரு முறை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Exit mobile version