Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

இவர் மனது வைத்தால்தான் தோனி விளையாட முடியும்: சுரேஷ் ரெய்னா திட்டவட்டம் !

தோனி இனி இந்திய அணிக்காக விளையாடுவது இவர் மனது வைத்தால்தான் நடக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

ஏனென்றால் உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின் தோனி 6 மாதமாக இந்திய அணிக்காக எந்த வொரு போட்டியிலும் விளையாடவில்லை. இதையெல்லாம் கணக்கில் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் கருத ஆரம்பித்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இது குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனி இந்த ஆண்டு சென்னை அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தோனி ஐபிஎல் போட்டிகளுக்கு இப்போது தயாராகி விட்டார். விரைவில் அவர் சென்னை வந்து பயிற்சிகளை மேற்கொள்வார். இப்போது அவர் தனது குடும்பத்தோடு நாட்களை செலவிட்டு வருகிறார். தோனி இந்திய அணியில் விளையாடுவது கோலி எடுக்கும் முடிவில் தான் இருக்கிறது. அவர் இப்போதும் உடல்தகுதியோடு இருக்கிறார். அவர் இந்திய அணிக்குத் தேவை என்றே இப்போதும் நான் கருதுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Exit mobile version