Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகையின் செயலை வெறுத்த தோனி!! காரணம் என்னவாக இருக்கும்??

Dhoni hated the actress's actions!! What could be the reason??

Dhoni hated the actress's actions!! What could be the reason??

நடிகையின் செயலை வெறுத்த தோனி!! காரணம் என்னவாக இருக்கும்??

கிரிக்கெட்டில் உலக சாதனைகளை படைத்து நம் அனைவரின் மனத்திலும் என்று நீங்கா இடத்தை பிடித்து வைத்திருக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் தான் தல தோனி ஆவார்.

இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கிரிக்கெட்டில் சாதித்த வரை போதும் தற்போது சினிமாத்துறையில் சாதிக்கலாம் என்று திட்டம் தீட்டி தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார்.

அதில் முதலாவதாக ஒரு தமிழ் படத்தை தயாரித்து இருக்கிறார். அந்த படத்தில், ஹீரோவாக ஹரீஷ் கல்யாண் மற்றும் ஹீரோயினாக இவானா-வும் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் முன்னணி நடிகையான நதியாவும் நடித்திருக்கிறார். மேலும், மிர்ச்சி விஜய், யோகி பாபு, வெங்கட் பிரபு, விடிவி கணேஷ் போன்ற பல நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்படம் வருகின்ற 28 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. எனவே, படத்திற்கான புரோமோஷன் வழங்குவதற்காக ஹரீஷ் கல்யாண், இவானா மற்றும் தோனியின் மேனேஜர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது இவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு வந்தது.அப்போது தோனியின் மேனேஜர் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, படம் தயார் செய்யப்பட்டு, முழு படத்தையும் தோனி பார்த்துவிட்டு இடைவேளை சமயத்தில் ஹீரோயின் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார்.

ஏனென்றால் படத்தில் அவரின் கதாபாத்திரமானது அம்மாவையும் மகனையும் பிரிப்பது போல் அமைந்திருக்கிறது. எனவே, தோனி இவானாவிடம் உன்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி உள்ளார்.

தனியாக இவானாவை பிடிக்கும், படத்தில் மட்டும் அந்த காதாபாத்திரம் பிடிக்கவில்லை என்று தோனி கூறியதாக அவருடைய மேனேஜர் பட புரோமொஷனில் கூறி உள்ளார்.

Exit mobile version