Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

#image_title

பெயர் தெரியாத இளம் கிரிக்கெட் வீரரை பைக்கில் அழைத்துச் சென்ற தோனி – ஏக்கத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் உலகில் நட்சத்திர வீரராக வலம் வருபவர்  மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். அவர் இவ்வளவு உயரத்திற்கு முன்னேறி வந்தாலும், பேரும், பெயரும் எடுத்தாலும், நாம் வந்த வழியை அவர் என்றைக்கும் மறந்ததே கிடையாது.

எந்த ஒரு கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னரும், இளம் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை கேட்பார்கள். அதற்கு சலிக்காமல் தோனியும் அறிவுரை கூறுவார். எப்போதும், தோனிக்கு இளம் வீரர்கள் கூட இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவாராம். அவர்கள் மேல் தனி பிரியம் வைப்பாராம்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், பெயர் தெரியாத ஒரு கிரிக்கெட் வீரரை, தோனி ஜார்க்கண்டில் பயிற்சி கொடுத்திருக்கிறாராம். பயிற்சி முடிந்த பின்னர், தோனி அந்த இளம் வீரரை தன் பைக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அந்த வீரர் இதை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் தோனியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.  அய்யோ, அந்த வீரராக நாம் இருக்கக்கூடாதா என்றும் ஏங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.  அடுத்த ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. வரும் ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Exit mobile version