கிரிக்கெட்டில் தல அனைவராலும் அழைக்கபடும் தொனி இந்திய கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நபர். இந்திய அணியில் இருந்து 2 மாதம் விலகி சற்று ஓய்வு எடுத்து இராணுவ உடையில் கலக்கி வருகிறார்.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனி அணியில் இல்லாததால் டோனியின் தனது எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் அளிப்பர் என எதிர்பார்க்க பட்டது.
ஆனால் டோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடும் இந்திய அணியின் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தன. ஆனால் அந்த வருத்தத்தை போக்க தோனி இராணுவத்தில் பணி புரியும் காணொளி புகைப்படங்களை கண்டு சந்தோசத்தில் உள்ளன.
தல டோனி காஷ்மீரில் வீரர்களுடன் ராணுவ உடையில் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து டோனி, வாலிபால் விளையாடும் வீடியோவை டோனியின் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அது மட்டும் இல்லாமல் தொனி காலணியை சுத்தம் செய்யும் காட்சி புகைப்படமாக வந்துள்ளது. இணையத்தில் பரவி வருகிறது. தோனியின் இந்த எளிமையை கண்டு அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.